பாலாசூர்,டிச.20- இந்தியாவிலேயே தயாரிக் கப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி பெற்றுள் ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO) மூலம் புதிய தொழில்நுட்பங்களுடன் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரான பினாகா கடந்த 2008 ஆம் ஆண்டில் முதன்முதலாக சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து மேம்படுத்தப் பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர், ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் சண்டிப்பூர் கடல் பகுதி யில் வியாழனன்று வெற்றிகர மாக சோதனை செய்யப்பட் டது. ஒடிசா கடற்கரையிலிருந்து சண்டிப்பூரில் உள்ள ஒருங் கிணைந்த சோதனைக் கூடத்தில் இருந்து பினாகா லாஞ்சர் சோத னை செய்யப்பட்டது.சோதனை யில், இலக்குகள் அனைத்தும் மிக துல்லியமாக தாக்கப்பட்டதாக டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரி வித்துள்ளன. இந்த லாஞ்சர் மூலம் 44 விநாடிகளில் 12 ராக்கெட்டுகளை 12 வெவ்வேறு இலக்குகளை குறிவைத்து ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.